சடச்சடவெனச் சாத்தியடிக்கும்போதும்
தடதடவெனத் தண்ணீர்த்தந்தியடிக்கும்போதும்
கிடுகிடுக்கும் இடியிசையில் கிண்ணாரம் வாசிக்கும்போதும்
மனதிற்குப் பிடித்த
பகிரங்க ரகசிய வன்முறையை
மண்ணில் நிகழ்த்தும் மழை
மழை மழை மழை
மண்ணில் பெய்திடினும்
கண்ணுள் இறங்கிடினும்
மனதுள் வழிந்திடினும்
மழை மழை மழையே
கூடும்போதும்
கூடித் தளரும்போதும்
போதும்போதும் என்றாலும் போர்வைக்குள்ளும் பெய்யும்
சிற்றின்பச் சிருங்காரப் பிடிவாதம் மழை
முகமறியா உயிர்களுக்குள்ளும் ஒற்றைச் சிற்றிசைச் சிரிப்பால்
ரத்தவெறிக் கூட்டையும் பிய்த்தெறியும் பிஞ்சு மழலை மழை
மோதியடித்து மூர்க்கமாய் எழும் கடலலை நேற்றைய மழை
கோதிமுடித்தும் காதோரம் வழிந்து எழுந்து விழும் காதல்மழை
ஊதிய குழலாய் தேகமெங்கும் பரவிவழிந்து பரபரக்கும் கல்யாணமழை
கம்பளி-போர்வை எதுவாயினும்
இழுத்துப் போர்த்துவதும்
எடுத்து வீசுவதும்
இரண்டும் நிகழும்
இம்மழைச் சுகப்போராட்டத்தில்
எப்போதும் ஜன்னலோரம்
எப்போதும் மொட்டைமாடி
எப்போதும் தென்னைமரம்
எப்போதும் துளிரிலைகள்
எப்போதும் நீர்க்குமிழ்கள்
எப்போதும் இதயத்துளிகள்
எப்போதும் இணையும்துளிகள்
எப்போதும் அழகுதான்
அடர்மழையது
இருதயத்திற்குச் சிறகுதான்
மழை மழை மழை
மண்ணில் பெய்திடினும்
கண்ணுள் இறங்கிடினும்
மனதுள் வழிந்திடினும்
மழை மழை மழையே
ரா.ராஜசேகர்

No comments:
Post a Comment